புதுடில்லி தீ விபத்தில் 43 பேர் பரிதாப மரணம்

அரசியலமைப்புப் பேரவை 12ஆம் திகதி கூடுகிறது பக்கம் 03

50 பேர் எரிகாயங்களுடன் மீட்பு

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ராணி ஜான்சி வீதியில் உள்ள பொம்மை மற்றும் பயணப் பை (ட்​ெராலி பேக்) தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் 50 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிசார் கூறினார்.

மின்சாரக் கசிவினால் இந்த தீவிபத்து நடந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான கட்டடத்தில் பிளாஸ்டிக் மோல்டிங் இயந்திரம் ஒன்று இருந்தது. 600 சதுர அடி குறுகிய இடத்தில் தீ பற்றி உள்ளது. அந்த இடத்தில் பாடசாலைப் பைகள், போத்தல்கள், அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன என தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். இந்த கிடங்கில் அதிகளவில் வைக்கப்பட்டுள்ள தாள்கள் மற்றும் அட்டைப் பெட்டிகள் தீயில் எரியத் தொடங்கியதால், அதிலிருந்து எழுந்த புகையினால் சுவாசிக்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த இடம், மிகவும் குறுகலான வீதியில் அமைந்துள்ளதால் மீட்புக் குழுவினரால் முழு வீச்சில் செயல்பட முடியாமல் போயுள்ளது. எனவேதான் உயிரிழப்புகள் அதிகரித்தன.

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை