நியூசிலாந்தை 296 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸி

மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் அபாரமாக பந்து வீச நியூசிலாந்தை 296 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் பேர்த்தில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் லாபஸ்சாக்னேயின் (143) சூப்பரான சதத்தால் 416 ஓட்டங்கள் குவித்தது. டிரவிஸ் ஹெட் 56 ஓட்டங்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோஸ் டெய்லரை (80) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து 166 ஓட்டங்களுக்கு சுருண்டது.

250 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடியது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த லாபஸ்சாக்னேவும் (50), தொடக்க வீரர் ஜோ பேர்ன்ஸும் (53) அரைசதம் அடிக்க அவுஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை இடைநிறுத்தியது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், வாக்னர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஒட்டுமொத்தமாக அவுஸ்திரேலியா 467 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் நியூசிலாந்து அணிக்கு 468 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

468 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. ஸ்டார்க் மற்றும் நதன் லயன் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து துடுப்பாட்டவீரர்கள் திணறினர்.

ஜீத் ராவல் 1 ஓட்டத்துடனும், டாம் லாதம் 18 ஓட்டங்களிலும், கேன் வில்லியம்சன் 14 ஓட்டங்களிலும், ரோஸ் டெய்லர் 22 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். விக்கெட் காப்பாளர் வாட்லிங் மட்டும் தாக்குப்பிடித்து 40 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதியில் நியூசிலாந்து 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனால் அவுஸ்திரேலியா 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்டார்க், நதன் லயன் தலா நான்கு விக்கெட்டுக்களும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 9 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா 1--0 என முன்னிலைப் பெற்றது.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை