சேர் ஜோன் டாபர்ட் பாடசாலை கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில்

புதிய 14 சாதனைகள்

50ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் பாடசாலை கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் புதிய 14 சாதனைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆண்கள் கனிஷ்ட பாடசாலை சம்பியன்ஷிப் பட்டத்தை கொழும்பு, புனித சூசையப்பர் கல்லூரி வெற்றியீட்டியதுடன்,பெண்கள் கனிஷ்ட பாடசாலை சம்பியன்ஷிப் பட்டத்தை கொழும்பு,மியுசியஸ் கல்லூரி பெற்றுக் கொண்டது. கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நவம்பர் 28 முதல் 30 ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்தபோட்டிகள், நான்கு வயது பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டன (12வயதுக்குட்பட்ட, 13 வயதுக்குட்பட்ட, 14 வயதுக்குட்பட்ட மற்றும் 15 வயதுக்குட்பட்ட). இந்த சம்பியன்ஷிப் போட்டிகளில் 800 க்கும் அதிகமான பாடசாலைகளின் 19000 க்கும் அதிகமான வீர,வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். கந்தானை, டி மெசெனொட் கல்லூரியின் குஷான்,சிறந்த மெய்வல்லுநர் வீரர் விருதை பெற்றுக் கொண்டதுடன்,கொழும்பு சர்வதேச பாடசாலை,கண்டி பாடசாலையின் சேனகா குணரட்ன,சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனைக்கான விருதைபெற்றுக் கொண்டார்.

இந்தபோட்டிகளில் பெண்கள் பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே கொழும்பு விசாகா வித்தியாலயம் மற்றும் மொரட்டு Our Lady of Victories Convent பெற்றுக் கொண்டன. ஆண்கள் பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை வத்தளை லைசியம் கல்லூரி மற்றும் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி ஆகியன பெற்றுக் கொண்டன.

இந்த போட்டி களுக்கு முன்னணி சொக்லட் வர்த்தக நாமமான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட்டின் ரிட்ஸ்பரி அனுசரணை வழங்கியிருந்தது. தொடர்ச்சியான ஒன்பதாவது வருடமான இந்த அனுசரணையை வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும். நாட்டின் எதிர்கால நட்சத்திரங்களை கட்டியெழுப்புவதில் உறுதியான பங்களிப்பு வழங்குகின்றமைக்காக ரிட்ஸ்பரி நற்பெயரை பெற்றுள்ளது.

ஜோன் டாபர்ட் சம்பியன்சிப் போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி அனுசரணை வழங்குவதற்கு மேலாக,கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் போட்டிகள்,கனிஷ்ட டெனிஸ் போட்டித் தொடர்,சுப்பர் 16 கனிஷ்ட ரக்பி கானிவல் மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை