2030ற்குள் இலங்கை பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும்

நீர் மற்றும் கழிவகற்றல் துறையில் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை வெகுவாக அடைந்திருப்பதன்மூலம் 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியுமென நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீர்கொழும்பு கோல்டி சேன்ட்ஸ் ஹோட்டலில் நேற்று ஆரம்பமான ' கழிவகற்றல் மற்றும் தூய்மை தொடர்பான பிராந்திய செயற்பாடுகளை கற்றல்,' எனும் மூன்று நாள் செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த 05 வருடங்களுக்குள் இலங்கை இத்துறையில் அதிக முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை