புதிய செயற்கை கோளை விண்ணில் ஏவியது சீனா

சீனாவின் புதிய செயற்கைகோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சீனா, ஜிலின்-1 வரிசை செயற்கைகோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்தி வரும் சீனா, இந்த முயற்சியின் தொடர்ச்சியாக ‘ஜிலின்-2 காவோபென் 02பி’ என்ற செயற்கைகோளை உருவாக்கி நேற்று விண்ணில் செலுத்தியது.

உயர் தொலை உணர்வுத்திறன், அதிவேக தரவு பரிமாற்ற வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களையுடைய இந்த செயற்கை கோளை சீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த செயற்கைகோளை ‘கே இசட்-1 ஏ’ ராக்கெட் மூலம் சான்சி மாகாணத்தில் உள்ள டையுவான் செயற்கைகோள் ஏவு மையத்தில் இருந்து நேற்று காலை 10.55 மணிளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக அதன் சுற்றுபாதையில் நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

ஏற்கனவே விண்வெளியில் உள்ள ஜிலின்-1 செயற்கைகோள்களுடன் இந்த செயற்கைகோளும் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோள் விவசாயம், வன இயல், வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தொலைநிலை உணர் திறன் தரவு மற்றும் சேவைகளை வழங்க உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Mon, 12/09/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக