கம்முரி சூறாவளி; பிலிப்பைன்ஸில் 200,000 பேர் வெளியேற்றம்

விமான சேவைகளும் ரத்து

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கம்மூரி சூறாவளி கடுமையாகத் தாக்கியதில் 200000 பேர் இருப்பிடங்களை விட்டு ​வெளியேறியுள்ளதுடன் இருவர் உயிரிழந்தனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்த அச்சத்தால் நாட்டின் முக்கிய விமான நிலையமும் மூடப்பட்டுள்ள துடன் கரையோரப் பிரதேசங்களிலிருந்தவர்களும் வெளியேறி உள்ளனர். மேலும் இழப்புக்களைத் தவிர்க்க பாதிக்கப்பட்ட மாகாணங்களில் பாடசாலைகள் மூடப் பட்டுள்ளதுடன், அதிகளவான விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டு சில விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இரண்டு ஆண்டுகளுக்கொரு தடவை நடைபெறும் பிராந்திய விளையாட்டுக்களும் சூறாவளியால் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நாட்டைத் தாக்கிய இருபதாவது சூறாவளியான கம்முரி செவ்வாய்க்கிழமை உள்ளுர் நேரப்படி நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக பிரதான லூசன் தீவைத் தாக்கியது (திங்களன்று 16:00 GMT). வலுப்படுத்தும் சூறாவளி உள்நாட்டில் திசோய் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் தலைநகர் மணிலா அருகே சூறாவளி கடந்து செல்லுமென எதிர்பார்க்கப்படு கிறது. நூறு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட தீவுக்கூட்டம் பசிபிக்கின் 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படுகிறது, பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளை அதிகம் கொண்ட பூமியின் பகுதிகளில் ஒன்றாகும்.

Wed, 12/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை