நேட்டோவின் 70வது மாநாடு பிரித்தானிய தலைநகரில் ஆரம்பம்

அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ அமைப்பின் எழுபதாவது மாநாடு பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு உலகத் தலைவர்கள் பலர் லண்டனுக்கு விஜயம் செய்கின்றனர். நேட்டோ நட்பு நாடுகள் தங்கள் பொறுப்புக்களை இரண்டு மடங்கு அதிகளவில் நிறைவேற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ மாநாட்டை முன்னிட்டே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்குப் 10 நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க ஐரோப்பிய நட்பு நாடுகளை ஊக்குவித்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். கடந்த ஆண்டு தனது கோரிக்கைகள் மூலம் நிகழ்ச்சி நிரலை தடம் புரட்டிய டிரம்ப், நட்பு நாடுகள் தங்கள் இராணுவ முதலீட்டை எவ்வாறு அதிகரித்தன என்பதில் திருப்தி அடைந்ததாகத் வாட்ஃபோர்டில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட சக நேட்டோ தலைவர்கள் எண்ணுகின்றனர்.

ஆனால் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், டிரம்பின் பிரசன்னம் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டங்களில் தன்னை பாதிக்கும் என்று பதற்றமடைகின்றார்.

"பிரெக்சிட்" உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வேட்பாளரையே மக்கள் அதிகமாக நேசிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் எதிர்க் கட்சியான தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின், அமெரிக்க ஜனாதிபதியுடன் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொண்டுள்ள நெருக்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஈடாக அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைக்கான இலாபகரமான அணுகலை வழங்க பிரிட்டன் பிரதமர் ஜோன்சன் தயாராக இருப்பதாக தொழிற் கட்சி எச்சரித்துள்ளது. ஆனால் ஜோன்சன் இதனை மறுத்துள்ளார். பிரதான உச்சிமாநாட்டோடு பல இருதரப்பு சந்திப்புகளையும் அமெரிக்க ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார். மேலும் செவ்வாயன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் எலிசபெத் மகாராணியுடன் உணவருந்தவுள்ளார்.

Wed, 12/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை