உருகுவேயில் 1.3 பில். டொலர் போதைப் பொருள் பிடிபட்டது

உருகுவேயில் 1.3 பில்லியன் டொலர் மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.

அந்த சம்பவத்தில் சுமார் 6 தொன் கொக்கைன் பிடிபட்டதாக அதிகாரிகள் கூறினர். 4.4 தொன் போதைப்பொருள் மான்டிவிடியோ துறைமுகத்தில் பிடிபட்டது. போதைப்பொருட்கள் 4 கொள்கலன்களில் மாவுக்குள் மறைக்கப்பட்டு கடத்தப்படவிருந்தது.

மற்றொரு சம்பவத்தில் 1.5 தொன் போதைப்பொருள் ஒரு பண்ணையில் பிடிபட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அண்மைக் காலமாக போதைப்பொருட்களை கடத்தும் கும்பல்கள் உருகுவேயை போக்குவரத்து நடுவமாக பயன்படுத்தி ஆபிரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வருகின்றன.

அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இதற்கு முன் உருகுவே நாட்டில் கடந்த நவம்பர் மாதம் இதே மான்டிவிடியோ நகரில் 3 தொன் கொகைன் போதைப்பொருள் கடத்தலை தடுத்து, பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை