ஜனவரியில் இலங்கை அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணம் உறுதி

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துடன் இலங்கை அணி அதிக போட்டிகள் கொண்ட ஆண்டாக 2020 ஆம் ஆண்டை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி இலங்கை அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணம் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடருக்கு இலங்கை அணி தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

புத்தாண்டை ஆரம்பித்து இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்தப் போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 5 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அந்த போட்டிகள் ஐ.சி.சி. எதிர்கால போட்டி அட்டவணையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

எவ்வாறாயினும் ஜனவாரி மாத ஆரம்பத்தில் சிம்பாப்வே அணி இந்திய சுற்றுப்பயணத்திற்காக தயாராக இருந்தபோதும் (மூன்று டி-20 போட்டிகள்) சிம்பாப்வே அணிக்கு கடந்த ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி விதிக்கப்பட்ட சர்வதேச போட்டித் தடை காரணமாக அந்த போட்டிகளை கைவிடுவதற்கு வேண்டி ஏற்பட்டது. அதனால் அந்த தொடர் நடத்த ஏற்பாடாகி இருந்த காலத்தில் இலங்கையுடன் டி-20 போட்டித் தொடர் ஒன்றை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்தது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. எதிர்கால போட்டிகளுக்கான போட்டி அட்டவணையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சிம்பாப்வே அணிக்குள் இருந்த முரண்பாடுகள் காரணமாக அந்த தொடர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை மூலம் இறுதி முடிவொன்று எடுக்கப்படாமல் இருந்தபோதும் ஜிம்பாப்வே அணிக்கு ஐ.சி.சி. இனால் விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை கடந்த ஒக்டோபர் மாதத்தில் நீக்கப்பட்டதை அடுத்து அந்தத் தொடரை நடத்துவதற்கு முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.

“இலங்கை அணிக்கு இருக்கின்ற அடுத்த டெஸ்ட் தொடர் சிம்பாப்வே அணியுடன் நடைபெறுகின்ற டெஸ்ட் தொடராகும். இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் ஜனவரி 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஐ.சி.சி மூலம் சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட சர்வதேச போட்டித் தடைக்கு பின்னர் அந்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறுகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்” என்று இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணம் எதிர்பார்த்ததுபோன்று இடம்பெற்றால் 2017 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதிக்கு பின்னர் சிம்பாப்வேயில் டெஸ்ட் போட்டித் தொடர் ஒன்று இடம்பெறுகின்ற முதல் சந்தர்ப்பமாக அமையும்.

இலங்கை அணி மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையே கடைசியாக இடம்பெற்ற 8 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற்றிருப்பதோடு 2016 நவம்பர் மாதத்திற்கு பின்னர் இலங்கை அணி சிம்பாப்வேயுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாகவும் அமையும்.

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை