சீனாவில் பாலியல் தொழிலுக்கு வழங்கும் தண்டனையில் மாற்றம்

சீனாவில் பாலியல் தொழிலுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளில் நேற்று முதல் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்கள் பிடிபட்டால் கட்டாய கல்வி மையங்களுக்கு இரண்டு ஆண்டுகள் அனுப்பப்பட்டு வந்தது.

இங்கு தடுத்துவைக்கப்படுபவர்கள் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

இந்த தடுப்புக் காவல் முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவோர் குறுகிய காலம் சிறைத் தண்டனை அனுபவிக்கும் வகையில் தண்டனையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் சீனாவில் பாலியல் தொழில் தொடர்ந்து சட்டவிரோதமாக உள்ளது.

இந்தக் குற்றத்திற்காக கைது செய்யப்படுபவர்கள் 15 நாட்கள் வரை சிறைத் தண்டனை மற்றும் 5,000 யூவான் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட இதுபோன்ற மையங்கள் சிறந்த பலன்களைக் கொடுத்ததாகக் கூறும் சீனா, தற்போதைய கால சூழலில் அவை பொருத்தமற்றதாக ஆகிவிட்டதாகக் கூறுகிறது.

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை