13 சில விடயங்களுக்கு மாற்று வழி தேட வேண்டும்

2/3 பெரும்பான்மை கிடைத்தால் 19 ஆவது திருத்தத்தை நீக்குவேன்

'இந்து' பத்திரிகைக்கு ஜனாதிபதி பேட்டி

13 ஆவது திருத்தத்திலுள்ள சில விடயங்களுக்கு மாற்றுவழி தேட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இதனைப்பற்றி ஆராய தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் 19 ஆவது திருத்தத்தை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 'இந்து' பத்திரிகைக்கு பேட்டியளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் நாட்டு தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகள் அளித்தாலும் இறுதியில் எதுவுமே நடக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக எதுவும் செய்ய முடியாது என்று  நம்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் அதிகாரப் பகிர்வு தொடர்பில் வாக்குறுதியளித்தார்கள். பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யர்களாவர். தமிழர் பகுதியை அபிவிருத்தி செய்யாதீர்கள் என்றோ தொழில் வழங்க வேண்டாம் என்றோ எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள்.ஆனால், அரசியல் பிரச்சினைகள் வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

13 வது திருத்தத்தினால் பொலிஸ் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவது போன்ற சில பகுதிகளைத் தவிர மேலும் இதனால் செயல்பட முடியாதது.

அதை நாங்கள் செயல்படுத்த முடியாது. அதற்கான மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், போரின் போது செய்ததை விட தான் சமாதான காலத்தில் கூடுதல் வேலைகளை செய்ததாகவும் தான் இல்லாமல் மாகாண சபை தேர்தல்கள் நடந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் எங்களுக்கு 2/3 பெரும்பான்மை கிடைத்தால் 19 வது திருத்தத்தை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதாகவும் அந்த திருத்தம் தோல்வி முயற்சி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(முழு விபரம் 05 பக்கம்)

 

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை