சிலி நகரில் வேகமாக பரவும் தீயினால் 120 வீடுகள் அழிவு

சிலி நகரில் வேகமாக பரவும் தீயினால் 120 வீடுகள் அழிவு-Chile Houses-Fire

சிலி நாட்டின் வலபரைசோ நகரில் ஏற்பட்டிருக்கும் வேகமாகப் பரவும் காட்டித் தீ ஒன்றினால் குறைந்தது 120 வீடுகள் அழிந்திருப்பதோடு பெரும் எண்ணிக்கையானோர் வெளியேறியுள்ளனர்.

இந்த தீயை கட்டுப்படுத்துவதற்கு நகரில் இருக்கும் அனைத்து தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 90,000 வாடிக்கையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  

இந்த தீ வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக வலபரைசோ நகர மேயர் ஜோர்ஜ் சார்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.  

உயர் வெப்பநிலை மற்றும் வேகமான காற்று நிலைமையை மேலும் மோசமடையச் செய்வதாக மேயர் குறிப்பிட்டுள்ளார். வலபரைசோ சிலி நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று என்பதோடு பிரதான துறைமுகமும் அங்கு உள்ளது. தீயினால் கிட்டத்தட்ட 120 ஹெக்டயர் புல்நிலம் ஏற்கனவே அழிந்துள்ளது.  

இந்த ஆண்டு காட்டுத் தீயினால் பிரேசில், இந்தோனேசியா உட்பட உலகின் பல பகுதிகளிலும் பெரும் அழிவுகள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.  

கடந்த செப்டெம்பர் தொடக்கம் அவுஸ்திரேலியாவில் நீடித்து வரும் காட்டுத் தீயினால் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதோடு நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. 

Thu, 12/26/2019 - 12:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை