ஒரே குடும்பத்தினர் கொல்லப்பட்ட காசா தாக்குதல் ‘தவறுதலானது’

ஒரே குடும்பத்தினர் கொல்லப்பட்ட காசா தாக்குதல் ‘தவறுதலானது’-Gaza Attack-Israel Terrorism

காசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கொல்லப்பட்ட வான் தாக்குதல்கள் தவறுதலாக இடம்பெற்றதாக இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த வான் தாக்குதலில் ரஸ்மி அபூ மல்ஹுஸின் வீடு இலக்கு வைக்கப்பட்டிருந்தது. இவர் பலஸ்தீன அதிகார சபையின் ஒரு பணியாளராவார்.

டெயிர் அல் பலாஹ்வில் இருக்கும் அவரது வீட்டுக்கு மேலால் இஸ்ரேல் போர் விமானங்கள் நான்கு குண்டுகளை வீசியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதோடு இவர்களில் ஐவர் சிறுவர்களாவர்.

பலஸ்தீன ஜிஹாத் போராட்டக் குழுவின் தளபதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அப்போது கூறியது. இதனை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிராகரித்தனர்.  

இந்தக் கட்டடம் போராளிகள் பயன்படுத்தியபோதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்பட்டிருக்கவில்லை என்று இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.  

இவ்வாறான நிகழ்வுகளை குறைப்பதற்கு இந்த தவறிலிருந்து பாடம் கற்றிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Thu, 12/26/2019 - 12:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை