புதிய சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகத்தில் நிதி மோசடி

புதிய சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகத்தில் நிதி மோசடி-Scam on New Driving Licence Issuance

சுயாதீன ஆணைக்குழு நியமிக்க முடிவு

மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதிப் பத்திர விநியோக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. 

போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர,  

மோட்டார் வாகன பதிவுத் திணைக்கள அதிகாரிளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே ஒப்பந்தம் செய்துக் கொண்ட நிறுவனத்தினால் நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று, ஒப்பந்த காலப்பகுதியினுள் இந் நிறுவனம் ஒப்பந்தத்திற்கமைய செயற்படாமையினால் அரசாங்கத்திற்கு சுமார் 400 கோடி ரூபா வரை நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்ைககளின் ஊடாக தெரிய வந்துள்ளது. 

அதன்படி, இந் நிறுவனம் தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

விசாரணைகளின் பின்னர் நிறுவனம் இலங்கையினுள் செயற்படுவதை இடைநிறுத்த தேவையான ஆவணங்களை பட்டியலிடுவதற்கும் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

Thu, 12/26/2019 - 11:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை