அபுதாபி, பங்களா டைகர்ஸ், மராதா அரேபியன்ஸ் அணிகள் வெற்றி!

ரி-10 கிரிக்கெட் தொடர்:

10 ஓவர்களை கொண்ட ரி-10 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது அத்தியாயம் தற்போது, ஐக்கிய அரபு இராச்சியத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான இத்தொடர், எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் மெத்தமாக 29 போட்டிகள் நடைபெறுகின்றன.

எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இரண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டு, நாளொன்றுக்கு மூன்று போட்டிகள் வீதம் நடைபெறுகின்றன.

இந்த இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.

சரி தற்போது நேற்றுமுன்தினம் நடைபெற்ற மூன்று போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

குழு பி பிரிவில் நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில், நோர்தன் வோரியஸ் அணியும், அபு தாபி அணியும் பலப்பரீட்சை நடத்தினர்.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நோர்தன் வோரியஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய நோர்தன் வோரியஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் டேரன் சமி 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, சேம் பிளிங்ஸ் 35 ஓட்டங்களுடனும், ஆந்ரே ரஸ்ஸல் 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

அபு தாபி அணியின் பந்துவீச்சில், பென் லாப்லின் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, 93 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அபுதாபி அணி, 8.3 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அபுதாபி அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதில் அபு தாபி அணி சார்பில், நிரோஷன் டிக்வெல்ல 8 ஓட்டங்களையும், லுக் ரைட் 48 ஓட்டங்களையும், மொயின் அலி 30 ஓட்டங்களையும், லிவீஸ் கிரிகோரி ஓட்டமெவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

அலெக்ஸ் டேவீஸ் மற்றும் பராஸ் கட்கா ஆகியோர் தலா 1 ஓட்டத்தினையும் பெற்றனர்.

நோர்தன் வோரியஸ் அணியின் பந்துவீச்சில், கிறிஸ் கிரீன் 2 விக்கெட்டுகளையும், மார்க் டியல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக, லுக் ரைட் தெரிவுசெய்யப்பட்டார். குழு பி பிரிவில் நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில், பங்களா டைகர்ஸ் அணியும், கர்நாடகா டஸ்கர்ஸ் அணியும் மோதிக் கொண்டன.

அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களா டைகர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடகா டஸ்கர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில். 1 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜோன்சன் சார்லஸ் 57 ஓட்டங்களையும், ஹசிம் அம்லா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களா டைகர்ஸ் அணியின் பந்துவீச்சில், கெவீன் கொத்திக்கொட 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 115 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணி, 8.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பங்களா டைகர்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, அன்ரி பிளெட்சர் 40 ஓட்டங்களையும், டொம் மோரிஸ் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கர்நாடகா டஸ்கர்ஸ் அணி சார்பில், சந்தீப் லமேச்சன் 2 விக்கெட்டுகளையும், ஷாபூர் சத்ரான் மற்றும் அஹமட் ராசா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அன்ரி பிளெட்சர் தெரிவுசெய்யப்பட்டார்.

குழு ஏ பிரிவில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில், மராதா அரேபியன்ஸ் அணியும், க்யலண்டர்ஸ் அணியும் மோதின.

அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற க்யலண்டர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மராதா அரேபியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, அடம் லித் 21 ஓட்டங்களையும், கிறிஸ் லின் 20 ஓட்டங்களையும், மிட்செல் மெக்லிகன் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

க்யலண்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், சுல்தான் அஹமட், சாமிட் பட்டேல், ஜோர்தான் கிளார்க், கிறிஸ் ஜோர்தான் மற்றும் ஜோர்ஜ் கார்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 108 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய க்யலண்டர்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் 60 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் மராதா அரேபியன்ஸ் அணி 47 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் க்யலண்டர்ஸ் அணியின் அதிகபட்ச ஓட்டமாக, டாவிட் மாலன் 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

மராதா அரேபியன்ஸ் அணியின் பந்துவீச்சில், மிட்செல் மெக்லிகன் 2 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 20 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மிட்செல் மெக்லிகன் தெரிவு செய்யப்பட்டார்.

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை