டோனி, அசாருதீன், கங்குலியை முந்தி விராட் கோலி சாதனை

அதிக இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்ற தலைவர் :

பங்களாதேஷ் அணிக்கெதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றதன் மூலம், அதிக முறை இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த இந்திய தலைவர் என விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த இன்னிங்ஸ் வெற்றியோடு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 10-வது முறையாக இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிக முறை இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த இந்திய அணி தலைவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

எம்.எஸ் டோனி 9 இன்னிங்ஸ் வெற்றிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அசாருதீன் 8 வெற்றிகளுடன் 3-வது இடத்திலும், கங்குலி 7 வெற்றிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை