தேசிய போட்டிகளில் தடம் பதிக்க காத்திருக்கும் குறுந்தூர ஓட்ட வீரர் பதுரியா அரபாத்

சப்ரகமுவ மாகாணத்தின் பிரபலமான தடகள விளையாட்டு வீரராக மிளிர்ந்து வரும் மாவனல்லை கே/மா/பதுரியா மத்திய கல்லூரியின் மாணவரும் மடுள்போவ கே/மா/முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவருமான லியாஉல் ஹசன்அரபாத் எதிர்வரும் 28/29 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ள தேசிய மட்ட"ஜோன் டாபர்ட்" 100 மீற்றர் 200 மீற்றர் 100×4 அஞ்சலோட்ட போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

தரம் 10 இல் கல்வி கற்கும் இம்மாண வன் பாடசாலை கல்வி வலய, மாகாண மட்டப் போட்டிகளில் காட்டிய திறமை காரணமாக தேசிய மட்ட போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.தடகள போட்டிகளில் மாத்திரமன்றி நீளம் பாய்தல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளிலும் சப்ரகமுவ மாகாண மட்ட வெற்றிகளை இவர் அடையாளப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதியாக கடந்த மாதம் நடைபெற்ற சப்ரகமுவ மாகாண மட்டப்போட்டிகளின் போது 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 12.6 செக்கன்களிலும் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 26.4 செக்கன்களிலு ம் ஓடி முடித்து இவர் தனது தேசிய மட்ட வெற்றிக்கான தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் 100×4 அஞ்சலோட்டப் போட்டியிலும் இவரது அணி மாகாண மட்டத்தில் 49.9 செக்கன்களில் ஓடி முடித்து தேசிய மட்ட நம் பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது.

தடகள போட்டிகளில் மாத்திரமன்றி நீளம் பாய்தல், ஈட்டி எறிதல் ஆசிய போட்டி களிலும் சப்ரகமுவ மாகாண மட்டத்தி ல் இவர் சிறப்பு வெற்றிகளைப் பெற்றுள்ளார் .

இவர் தற்போது கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர் குழாம் விளையாட்டு பிரிவு மற்றும் பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்புடன் தேசிய மட்ட போட்டிகளுக்கு தயாராகும் இவ்வீரர் ஹெம்மாதகம கே/மா/மடுள்போவ முஸ்லிம் மகா வித்தியாலயம் ஜமாலியா விளையாட்டுக் கழகம் ஹெம்மாதகம எச்.வை.எப் (HYF) ஆகி யவற்றின் ஆரம்ப வழிநடத்தல்களின் மூலம் தேசிய மட்டம் வரை உருவான இவரின் வெற்றிக்காக மடுள்போவ (கட்டார்)நலன்புரி சங்கம் மடுள்போவ (சவூதி) நலன்புரி சங்கம் ஆகியன இவரது வெற்றிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

இவர் மாவனல்லை ஹெம்மாதகம மடுள்போவ பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் லியாவுல் ஹசன் தம்பதிகளின் புதல்வராவார்.

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை