இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

இலங்கை-  இந்திய உறவை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல பதவிக் காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ டில்லியில் தெரிவிப்பு

இலங்கை,- இந்திய உறவை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல தமது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (29) காலை நடைபெற்றபோதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வு ராஸ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதன்போது இந்தியாவுக்கு வருகைதரும் வெளிநாட்டு அரச தலைவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ஜனாதிபதிகளுக்குமிடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், இந்தச் சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்தும் முக்கியமானதொரு சந்திப்பாகும் எனத் தெரிவித்தார்.

புதிய இலக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால்

முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களைப் பாராட்டிய இந்திய ஜனாதிபதி, இதற்கு தமது நாடு பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இந்திய பொது போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி வீ.கே. சிங் மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் பங்குபற்றினர்.

அதனைத் தொடர்ந்து ராஜ் காட் (Raj Ghat) சென்ற ஜனாதிபதி மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

விசேட அதிதிகளுக்கான குறிப்பேட்டிலும் ஜனாதிபதி இதன்போது கையெழுத்திட்டார்.

 

Sat, 11/30/2019 - 08:59


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக