அரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்களை விலகுமாறு அறிவுறுத்தல்

தமது இராஜினாமா கடிதங்களை ஒப்படைக்குமாறு கூட்டுத்தாபனங்கள், சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமது இராஜினாமா கடிதங்களை ஒப்படைக்குமாறு கூட்டுத்தாபனங்கள், சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களுக்கு அறிவிக்குமாறு, அனைத்து அமைச்சுக்களினதும்   செயலாளர்களுக்கும் ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

சுற்றுநிரூபம் ஒன்றை விடுத்துள்ள ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை, அரச நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் உள்ளவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதியினால் ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவிகளுக்கு தகைமை வாய்ந்த தொழில் வல்லுநர்கள் தொடர்பான பரிந்துரையை அல்லது விண்ணபிக்க விரும்புவோர் 2019 டிசம்பர் 18ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பரிந்துரைகளை அல்லது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு இக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

Sat, 11/30/2019 - 13:21


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக