முள்ளிவாய்க்காலில் மக்கள் பலர் கொல்லப்பட கோட்டாபயவே காரணம்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவே முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இல ட்சம் மக்கள் கொல்லப்பட காரணமானவர். எனவே வடக்கு, கிழக்கு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற மக ளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றுகையில்,

வடக்கு மாகாணத்தில் உள்ள மகளிரில் 99 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகையால் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் வடக்கு, கிழக்கில் இருக்கும் மகளிரை முன்னேற்றப் போகிறார். ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடக்கு, கிழக்கு மாகாணம் 30 வருடம் யுத்தத்தை எதிர்கொண்ட மாகாணம். எமது பெண்கள் இறுதி யுத்தத்தின் போது தமது உறவுகள், உடமைகள் எல்லாவற்றையும் இழந்து மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இது சர்வதேசம் அறிந்த உண்மை. எமது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பெண்களுக்காக நிதிகளை ஒதுக்கியது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறக்கப்பட்ட போதும் அவர்களுக்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.

காணாமற்போனோர் தொடர்பில் எதிர்வரும் 5 வருடத்திற்குள் முடிவு காண வேண்டும் என சஜித் பிரேமதாசவிடம் நாம் வலியுறுத்திக்கூறி வருகின்றோம். பெண்களுக்கான வாழ்வாதாரம், வீட்டுத்திட்டம், நுண்கடன் திட்டம் என்பன தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். இவற்றுக்கான நிதி எமது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை நூற்றுக்கு நூறு வீதம் வழங்க வேண்டும் என்றார்.

வவுனியா விசேட நிருபர்

Wed, 11/06/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக