நீண்டகாலம் பதவியில் இருந்து அபே சாதனை

ஜப்பானில் அதிக காலத்திற்குப் பணியாற்றிய பிரதமர் என்ற பெருமையை ஷின்ஸோ அபே பெற்றுள்ளார். நேற்று அவரின் 2,887ஆவது பணி நாளாகும். முன்னைய பிரதமர் டாரோ கட்சுராவின் சாதனையைப் பிரதமர் அபே முறியடித்தார்.

1901ஆம் ஆண்டிலிருந்து 1913ஆம் ஆண்டு வரை, டாரோ கட்சுரா மூன்று தவணைகளுக்குப் பிரதமராகச் சேவையாற்றினார்.

பிரதமர் அபே அதிக நாட்கள் சேவையாற்றிய போதிலும் இராணுவத்தை வலுப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதில் அவர் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறார். பிரதமராக அபே 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் வரை பதவி வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை