அடல்ப் ஹிட்லர் பிறந்த வீடு பொலிஸ் நிலையமாக மாற்றம்

ஆஸ்திரியாவில் நாஜித் தலைவர் அடல்ப் ஹிட்லர் பிறந்த வீடு பொலிஸ் நிலையமாக மாற்றப்படவுள்ளது.

இந்த இடத்தை வழிபட முடியாது என்பதற்கான சமிக்ஞை ஒன்றாக இந்த முடிவு இருப்பதாக உள்துறை அமைச்சர் வொல்பாங் பெஸ்சொர்ன் குறிப்பிட்டுள்ளார். பிரவுனு அம் இன் நகரில் உள்ள இந்த 17ஆம் நூற்றாண்டு கட்டடத்தின் குடியிருப்பு ஒன்றில் ஹிட்லர் தனது வாழ்வின் ஆரம்ப சில வாரங்களை கழித்தார்.

எனினும் இந்த சொத்து தொடர்பில் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வந்தது. தீவிர வலதுசாரிகளின் பிடியில் சிக்குவதை தடுப்பதற்கு இந்தக் கட்டிடத்தை அதன் முன்னாள் உரிமையாளரிடம் இருந்து ஆஸ்திரிய அரசு பல தசாப்தங்களாக வாடகைக்கு பெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் இந்த கட்டிடத்தை 8,10,000 யூரோக்களுக்கு அரசு கையகப்படுத்தியது.

அதன் பின்னர், இந்த கட்டடத்தை இடித்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்த நிலையில், தற்போது இதை பொலிஸ் நிலையமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை