பாப்பரசர் ஆசியா பயணம்

சமயங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கும் அணுவாயுதக் களைவுக்கும் ஆதரவு தெரிவிக்க பாப்பரசர் பிரான்ஸிஸ் ரோமிலிருந்து ஆசியாவுக்குப் புறப்பட்டுள்ளார்.

பெளத்த சமயத்தினரை அதிகம் கொண்டுள்ள தாய்லாந்துக்கும் ஜப்பானுக்கும் அவர் பயணம் மேற்கொள்கிறார்.

நேற்று பாங்கொக்கை சென்றடைந்த பாப்பரசர் பிரான்சிஸ் பெளத்த சமயத்தினருடனான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் புத்த பிக்குகளின் தலைவரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, தாய்லந்துப் பிரதமர் பிராயுத் சான் ஓச்சாவையும், தாய்லாந்து மன்னர் மஹா வஜிராலோங்கோர்னையும் அவர் சந்திப்பார்.

அதன் பின்னர், வரும் சனிக்கிழமை அன்று பாப்பரசர் பிரான்சிஸ் ஜப்பான் செல்வார். தாய்லாந்திலும் ஜப்பானிலும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவாகும்.

1980களுக்குப் பின்னர் ரோமிலிருந்து பாப்பரசர் ஒருவர் இரு நாடுகளுக்கும் பயணம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை