ரொஹிங்கிய விவகாரம் குறித்து மியன்மார் இராணுவம் விசாரணை

மியன்மார் இராணுவம் ரொஹிங்கிய விவகாரம் குறித்து அதன் சொந்தப் படை வீரர்கள் மீது விசாரணை மேற்கொண்டுள்ளது.

ரொஹிங்கிய முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் கு டார் பின் கிராமத்தில் பணியில் ஈடுபட்டிருந்த படையினர், அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

ரொஹிங்கிய இனத்தவரை அழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மியன்மார் இராணுவம் மீது, நெதர்லந்தில் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கும் முன்னர், மியன்மார் இராணுவம் அதன் சொந்த விசாரணையைத் ஆரம்பித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாருக்கு எதிராக காம்பியா அந்த வழக்கைத் தொடுத்துள்ளது.

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்த இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பல ஆயிரம் ரொஹிங்கிய முஸ்லிம் மக்கள் அண்டை நாடான பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை