நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய சீருடை அறிமுகம்

அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 2020ம் ஆண்டுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு (27.11.2019) பாலமுனை கஸமாறா மண்டபத்தில் நடைபெற்றது.

நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் பொருளாளர் ஜே.அர்சாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ செயலாளர் கியாஸ்தீன் பிரதம அதிதியாகவும், நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் பிரதித் தலைவர் எஸ்.ஏ.சபான் கௌரவ

அதிதியாகவும் கலந்து கொண்டு புதிய சீருடைகளை அறிமுகம் செய்து வைத்தனர்.

இதன்போது கழகத்தின் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான புதிய சீருடைஉட்பட 2020 ஆண்டுக்கு இரு புதிய சீருடைகளும் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுப் பிரிவுத்தலைவர் ஏ.எச்.றிசாட் கழகத்தின் முகாமையாளர் எம்.அஸ்வர் உட்பட கழகத்தின் பதவி வழி உத்தியோகத்தர்கள் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

(பாலமுனை தினகரன் ,பாலமுனை விசேட, ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள்)

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை