உயிரிழந்த மானின் வயிற்றில் ஏழு கிலோ பிளாஸ்டிக் குப்பை

காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட மான் ஒன்றின் வயிற்றில் 7 கிலோகிராம் பிளாஸ்டிக் குப்பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு அதிகாரிகளின் கண்டுபிடிப்பு, தாய்லந்தின் நீர் நிலைகள், காட்டுப் பகுதிகளில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த எச்சரிக்கை நிலையை அதிகரித்துள்ளது.

தாய்லந்தில் ஒருவர் ஆண்டுக்குச் சுமார் 3,000 பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகிறார். தென் கிழக்காசிய நாடுகளில் மிக அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் ஒன்றாக தாய்லந்து உள்ளது.

அது கடலில் வெளியேற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் சிக்கி கடல்வாழ் உயிரினங்கள் பல மடிந்து வருகின்றன.

நீர் நிலைகள் மட்டுமின்றி இப்போது நிலத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளாலும் உயிரினங்கள் மடிய ஆரம்பித்துள்ளன.

10 வயது மானின் வயிற்றில் குப்பைப் பைகள், உணவுப் பொட்டலங்கள், துண்டுகள், உள்ளாடைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. மானின் மறைவு, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதைப் பற்றி பாடம் புகட்டுவதாக உள்ளது என்று தாய்லந்தின் வனவிலங்குத் துறை குறிப்பிட்டுள்ளது.

Thu, 11/28/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக