சிரிய, ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

சிரியாவில் அந்நாட்டு அரசாங்கம் மற்றும் ஈரான் படைகளுக்கு சொந்தமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானிய தரப்பு இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகளை வீசியதற்கு பதிலடியாகவே பரந்த அளவில் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிரியா குறிப்பிட்டபோதும் தலைநகர் டமஸ்கஸுக்கு மேலால் பறந்த பெரும்பாலான ஏவுகணைகள் சிரிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

நகரில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உள்நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் தீ பற்றி எரியும் காட்சிகள் சமூகதளங்களில் பதிவாகியுள்ளன.

சிரியாவில் இருந்து வடக்கு இஸ்ரேலை நோக்கி வந்த நான்கு ரொக்கெட் குண்டுகளை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்தது. இந்த ரொக்கெட் குண்டுகள் தரையை தாக்கவில்லை என்று அது கூறியது.

2011ஆம் ஆண்டு இஸ்ரேலில் சிவில் யுத்தம் ஆரம்பித்தது தொடக்கம் அங்கு ஈரான் கால்பதிப்பதை தடுக்கும் முயற்சியாக இஸ்ரேல் சிரியா மீது நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்தியதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் குத்ஸ் படை மற்றும் சிரிய ஆயுதப் படைகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய படை நேற்று ட்விட்டர் ஊடாக தெரிவித்தது.

டமஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் பலரும் காயமடைந்திருப்பதாக சிரிய அரச ஊடகமான சானா குறிப்பிட்டுள்ளது.

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை