டிரம்ப் மீது குற்றச்சாட்டு: 2 அதிகாரிகள் சாட்சியம்

அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு மூத்த தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் சாட்சியமளித்துள்ளனர்.

தமது அரசியல் எதிரி ஜோ பைடன் மீது, ஊழல் தொடர்பான விசாரணை நடத்தும்படி உக்ரைனைக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை டிரம்ப் எதிர்கொண்டுள்ளார். அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையில் இரண்டாவது வாரப் பொது விசாரணை நேற்று நடைபெற்றது.

இராணுவ லெப்டினன்ட் கர்னல் அலெக்சாண்டர் விண்ட்மன், பிரதிநிதிகள் அவையின் புலனாய்வுக் குழுவிற்கு முன் சாட்சியமளித்தார்.

ஜூலை மாதத் தொலைபேசி உரையாடலின்போது பொருத்தமற்ற அரசியல் நிபந்தனைகளை உக்ரைனிய ஜனாதிபதியிடம் டிரம்ப் முன்வைத்தாக விண்ட்மன் கூறினார். சாட்சியமளித்த மற்றொருவர், துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் வெளியுறவு ஆலோசகர் ஜெனிபர் வில்லியம்ஸ் ஆவார்.

உக்ரேனிய ஜனாதிபதி பைடன் பற்றித் தொலைபேசியில் டிரம்ப் பேசியதை வழக்கத்திற்கு மாறான ஒன்றாகக் கருதுவதாய் அவர் குறிப்பிட்டார். பைடனைப் பற்றிப் பேசியதில் அரசியல் தொடர்பிருக்கலாம் என்றார் அவர்.

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை