சகல தமிழர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்

உலகத் தமிழர் பேரவை பகிரங்க அழைப்பு

கூடுதல் சீர்திருத்தமுள்ள  வேட்பாளரைத் தெரிவுசெய்யுங்கள்

வீணாக்கப்படும் வாக்கு விருப்பத்துக்கு மாறான  வேட்பாளரை வெற்றிபெறச் செய்துவிடும்

நாட்டின் வடக்கு, கிழக்கிலும் மற்றும் இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மக்கள் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அரசியல் நிலைப்பாட்டை கருத்திற்கொண்டு தங்களது வாக்குகளை சுதந்திரமாக செலுத்த வேண்டும் என்று உலக தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழர்களின் புலம்பெயர்ந்த அமைப்புகளின் கிளை அமைப்பான உலக தமிழர் பேரவை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் தீர்மானம் மிக்க பங்களிப்பை வழங்கிய நிலையில், புதிய அரசாங்கத்தின் செயற்பாட்டில் ஏமாற்றத்தை அனுபவித்த நிலையில், ஒருவித வெறுப்பு மனப்பான்மை தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ் அரசியல் தலைவர்களின் கூட்டு நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்க அனைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் மறுப்புத் தெரிவித்தமையும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

பாதிப்பின் உணர்வுகள் அரசியல் அக்கறையின்மை மற்றும் மனச்சோர்வுக்கு இட்டுச் செல்லக் கூடாது நல்ல பயன்தராத வாக்களிப்பு செயற்பாடுகள் மூலம் சர்வதேச சமுகத்துக்குப் பிழையான செய்தியை கொடுப்பதை விடத் தமிழ் மக்கள் தேர்தலில் ஆர்வமாக பங்கெடுக்கின்றனர் என்று காட்டுவது முக்கியமானதாகும். அதேநேரம் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளரைத் தமிழ் மக்கள் புத்தி சாதுர்யத்துடன் தெரிவு செய்வதும் முக்கியமானதாகும் என்றும்

உலக தமிழர் பேரவை அந்த அறிக்கையில் கூறியுள்ளது. அதேநேரம், வீணாக்கப்பட்ட வாக்கு தமது விருப்பத்துக்கு மாறான வேட்பாளரை வெற்றிபெறச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது என்று அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கமானது அதன் ஆரம்ப காலத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகிறது. அதேநேரம் யுத்த கால பொறுப்பேற்பு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஏற்கும் வகையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றியும் வாக்குறுதி வழங்கப்பட்டது. எனினும், இவ்வாறான முயற்சிகள் பல கடந்த இரண்டு வருடங்களில் நிறுத்தப்பட்டன. அவை திசை மாறியதையும் சில சந்தர்ப்பங்களில் இடம்பெற்றன. இதனால், இலங்கைளின் சீர்திருத்த நடைமுறைகள் மற்றும் முக்கிய நிறுவனங்களில் நிலை மோசமடைவதையும் காண முடிந்தது என்று உலக தமிழர் பேரவையின் அறிக்கை கூறுகிறது. இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மீண்டும் அதன் சீர்திருத்தங்களை ஆரம்பித்து அவற்றை விஸ்தரிக்குமா என்பதை பற்றிய உண்மையான ஐயப்பாடுகளை மாற்றியமைக்குமா, இல்லை அதற்கு மாறாக மோசமான நிலைக்கு செல்லுமா? என்பதை விளக்கும்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனநாயக சீர்திருத்தங்கள் முன்னேற்றகரமாக உள்ளன. தமிழ் மக்களின் முக்கிய கருத்துக்களான அரசியலமைப்பு சீர்திருத்த நடைமுறையைத் தொடர்தல், அதிகார பகிர்வு, நல்லிணக்க கடப்பாடுகள், சர்வதேச உடன்படிக்கைகள்,தீர்மானங்களுக்கு மதிப்பளித்தல் ஆகியவை அதில் உள்ளடக்கியிருக்கின்றன. அதற்கு மாறாக கோட்டாபயவின் விஞ்ஞாபனத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அதிக அளவில் பேசப்பட்டள்ளது. எனினும், ஜனநாயக நடைமுறைக்கான கடப்பாடுகள் குறைந்தே காணப்படுகின்றன. மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயக இலங்கையானது அதன் அனைத்து பிரஜைகளுக்கும் எட்டக்கூடிய பெறுமதி மிக்க இலக்காகும். எனினும், சிறுபான்மை சமூகத்தினரின் குறிப்பாக தமிழர்களின் அச்சம் மற்றும் அச்ச உணர்வுகளைக் குறிப்பாக ஜனநாயக வரைச்சட்டம் அவர்களது அக்கறைகள் தொடர்பாக மேலும் வாய்ப்புக்களை வழங்குவதில் அதுபோதுமானதாக இல்லை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது தெரிவுக்கு வாக்களிக்கும்போது இவை அனைத்தும் தமிழ் மக்களின் மனத்தில் இருக்கவேண்டும்.

அதேநேரம், கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது மனித உரிமைகள், ஆளுமை மற்றும் சட்ட ஆட்சி என்பவை எவ்வளவு மோசமான நிலையில் இருந்தன என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். வெறித்தனத்துடனான வன்முறை, வலிந்து மேற்கொள்ளப்பட்ட காணாமற்போதல்கள், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல், தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் மீதான அச்சுறுத்தல், வன்முறை ஆகியவற்றை கொண்ட யுகத்துக்கு மீண்டும் செல்லுதல், சர்வதேச கொள்கைகளில் இருந்து ஒதுக்கப்படுதல் ஆகிய விடயங்கள் ராஜபக்ஷ தலைமையின் கீழ் அச்சத்தை ஏற்படுத்தும் அம்சங்களாகும் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இலங்கையானது அதன் நிறுத்தப்பட்ட சீர்திருத்த நடைமுறையை தொடருமா அல்லது வேறு அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுமா அல்லது அண்மையில் பெற்ற ஜனநாயக வெற்றிகளைத் தோல்வியடையச் செய்யுமா? என்று தன்னிச்சையாட்சி வாதத்துக்குள் நுழையுமா? என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும்போது மனத்தில் வைக்கவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் உலக தமிழர் பேரவை மேலும் கூறியுள்ளது.

நமது நிருபர்

Wed, 11/13/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக