ஆஸி கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

2019 ஆஸி செயல்முறை கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி கடந்த 19ம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது. இப்போட்டிகள் நவம்பர் 10ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் பிலிப்பைன் பெட்டன்காஸ் நகரில் இடம்பெற்றது.

9 மில்லி மீற்றர் உற்பத்தி பிரிவின் கீழ் கலந்து கொண்ட இலங்கை பெண்கள் அணி இப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டது. இலங்கை வான்படையின் தலைவர் விமானப்படை பெண் வீரர் தருசி மேகலா இலங்கை அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியதோடு, இலங்கை இராணுவத்தின் லெப்டினன் லியனாராச்சி, பெண் படைவீரர் கௌசல்யா மற்றும் பெண் படை வீரர் தெவ்மினி போன்றோரும் இலங்கை அணியில் உள்ளடங்கியிருந்த ஏனைய விளையாட்டு வீரர்களாவர்.

போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணியின் பயிற்சியாளராக ஓய்வு பெற்ற கெப்டன் சரத் டி சொய்சா கலந்து கொண்டதோடு, அணியின் முகாமையாளராக லெப்டினன் கேர்னல் ஜயனாத் பெரேரா செயற்பட்டார்.

Sat, 11/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை