இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் 16 வது தேசிய ஒலிம்பிக் அறிவூட்டல் நிகழ்வு

இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் அதன் 16 வது தேசிய ஒலிம்பிக் கல்வித் தொடர்பு நேற்று 22ம் திகதி முதல் எதிர்வரும் 25ம் திகதி வரை பண்டாரவளையில் நடத்துகிறது.

ஒலிம்பிக் விழுமியங்களான ‘சிறப்பு, நட்பு, மதிப்பு’ ஆகியவை தொடர்பாக வெவ்வேறு கல்வித் திட்டங்கள் மூலம் இலங்கையர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவூட்டி வருகிறது.

இந்த ரீதியில் 16 வது ஒலிம்பிக் அறிவூட்டல் நிகழ்வு நவம்பர் 22ம் திகதி முதல் 25ம் திகதி வரை பண்டாரவளை தியத்தலாவை இராணுவ கல்விக் கூடத்தில் நடைபெறுகிறது. இவ்வருட நிகழ்வுக்கு இலங்கை இராணுவம் தேசிய ஒலிம்பிக் சங்கத்திற்கு ஆதரவு வழங்குகிறது.

இவ்வருடத்தின் மேற்படி நிகழ்வில் தெற்காசிய நாடுகளில் இருந்தும் சிலர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் தெற்காசிய பிரதேச தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் ஆகியவற்றில் இருந்து சுமார் 60 பேர் வரை இந்த நான்கு நாள் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விளையாட்டுக் கல்வி தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் சமந்த நாணயக்கார மேற்படி கல்வித் தொடருக்கு தலைமை தாங்குகிறார். இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா கற்கை நெறியின் பணிப்பாளராக செயற்படுவார்.

தேசிய ஒலிம்பிக் கமிடியின் 16 வது கல்வித் தொடரின் தொனிப் பொருள் சூழல் செயற்பாட்டுக்கான பேண்தகு உபகரணமாக ஒலிம்பிக் விழுமியங்கள் என்பதாகும்.

22ம் திகதி இடம்பெறும் ஆரம்ப நாள் நிகழ்ச்சியில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கலந்து கொள்வார். அதேநேரம் 25ம் திகதி இடம்பெறும் இறுதி நாள் நிகழ்வில் இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் கலந்து கொள்வார்.

Sat, 11/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை