இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 1,000 மீற்றர் உயரம் வரை வானத்தில் சாம்பலை கக்கியுள்ளது.

155 விநாடிகள் நீடித்த இந்த எரிமலை வெடிப்பு கடந்த ஞாயிறு காலை 10.46 மணிக்கு நிகழ்ந்தது என்று தேசிய பேரிடர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அகஸ் விபோவோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மெராபி எரிமலை கடைசியாக கடந்த 2016 ஒக்டோபரில் வெடித்தபோது 340க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

60,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்.

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை