கஞ்சா செடிக்காக காட்டுக்கு தீ வைத்த ஆடவர் கைது

அவுஸ்திரேலியாவில் தனது கஞ்சாச் செடிகளைக் காப்பாற்ற காட்டுத் தீயை ஆரம்பித்ததாக ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆடவரின் செயலால் கிழக்குக் கரையில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவியதாக நம்பப்படுகிறது. நியூ சவுத் வேல்ஸிலுள்ள எபொர் வட்டாரத்தைச் சேர்ந்த 51 வயது நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்

சுற்றியுள்ள செடிகளை எரிக்கும் ‘பேக்பேர்னிங்’ முறையைக் கடைப்பிடிக்க அவர் முயன்றதாக நம்பப்படுகிறது. தீ வெகுவாகப் பரவத் தொடங்கியும் அதனை அணைக்க ஆடவர் முயற்சி செய்யவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

மூன்று நாட்களுக்குப் பின்னரும் 10,000 ஹெக்டர் அளவுள்ள எபொர் காட்டுத் தீ நீடீத்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை அவர் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு பிணைவழங்க நீதிமன்றம் மறுத்தது.

விரைவில் கோடைகாலம் ஆரம்பிக்கும் நிலையில், காட்டுத்தீ தொடர்ந்து பரவுவது அவுஸ்திரேலிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை