யாழ்.- சென்னை நேரடி விமான சேவை திங்கள் முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நேரடி விமான சேவைள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதனைத்தொடர்ந்து வாராந்தம் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு விமான சேவைகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'எயார் இந்தியா' விமான சேவையின் துணை விமான சேவையான 'எலியொன்ஸ் எயார்' விமான சேவையே யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு விமான சேவையை நடத்தவுள்ளது. இதற்கமைய 9 *102 எனும் விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பகல் 12.45 மணிக்கு பயணத்தை தொடங்கி பிற்பகல் 2.10 மணியளவில் சென்னையை சென்றடையவுள்ளது. அதேபோன்று சென்னையிலிருந்து காலை 10.35 மணிக்கு பயணத்தை தொடங்கும் விமானம் நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எலியொன்ஸ் எயார் விமான சேவையானது இந்தியாவின் 53 இடங்களுக்கு விமான சேவையை முன்னெடுத்து வருகின்றது. அப்பட்டியலில் 54ஆவது விமான நிலையமாக யாழ்ப்பாணம் சேர்த்துக் ​ெகாள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இது எலியொன்ஸ் எயாரின் முதலாவது சர்வதேச கன்னிப்பயணமாக அமையும்.

இவ்விமான சேவையூடாக 41 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணமும் இந்தியாவும் ஒன்றிணைக்கப்படவுள்ளது. இச்சேவை மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் பயணிகள் திருச்சி, மதுரை,டெல்லி, திருவனந்தபுரம், கோவா, ஹைதராபாத்,குவைத்,மஸ்கட்,துபாய் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளுக்கு இலகுவாக பயணம் செய்ய முடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான ஆரம்ப விமான கட்டணமாக 45 அமெரிக்க டொலர்களும் வரிகளுக்காக மேலதிகமாக 53 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படும்.

இதேவேளை சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ஆரம்ப விமானக் கட்டணமாக 3,990 இந்திய ரூபாவுடன் மேலதிக வரியும் சேர்த்து அறவிடப்படவுள்ளது என்றும் விமான சேவை அறிவித்துள்ளது.

 

Sat, 11/09/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக