உதவி கல்விப் பணிப்பாளர் வரதராஜன் கல்விச் சேவையிலிருந்து ஓய்வு

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் தமிழ்ப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் கண வரதராஜன் தனது 31 வருட கல்விச் சேவையிலிருந்து கடந்த 17 ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளார்.

பெரியநீலாவணையினைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இவர் பெரியநீலாவணையைச் சேர்ந்த பிரபல சோதிடர் சித்தவைத்தியர் கரவாகு வடக்கு கிராமசபை உறுப்பினருமான அமரர் பணிக்கப்போடி கணபதிப்பிள்ளை தங்கரெத்தினம் தம்பதிகளின் புதல்வராவார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியினை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டதாரியாக தெரிவுசெய்யப்பட்டு கலைப்பட்டத்தினை நிறைவுசெய்ததுடன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலாநந்தா அழகியல் கற்கை நிலையத்தில் இசைக் கலைமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

ஆசிரியராக 1988 ஆம் ஆண்டு முதல் நியமனத்தினைப் பெற்று சிவானந்தா தேசிய பாடசலையிலும் கல்முனை கார்மேல் பாற்றிமாக் கல்லூரி, அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் கல்லூரி, உ​ெவஸ்லி உயர்தரப் பாடசாலைகளில் கற்பித்து பின்னர் கல்முனை கல்வி வலயத்தில் வாழ்க்கைத் தேர்ச்சிப் பாடத்தில் வளவாளராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவரது சேவையினை நினைவு கூர்ந்து இவருக்கு இரத்தினதீபம் விருது வழங்கும் விழாவில் 5 ரூபா பெறுமதியான தபால் தலையும் வெளியிட்டுவைத்தமை குறிப்பிடத்தக்கது.

மணல்சேனை நிருபர்

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை