மட்டக்களப்பில் நேர்மையான வியாபாரத்தை உறுதிப்படுத்தும் விழிப்புணர்வு பிரசுரம்

மட்டக்களப்பில் நேர்மையான வியாபாரத்தை உறுதிப்படுத்த பாவனையாளர் அலுவலக அதிகார சபையினால் நேற்று (27) விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுர விநியோகம் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மக்கள் மத்தியில் நேர்மையான வியாபார சூழலை உருவாக்கும் இவ்விழிப்புணர்வினை பாவனையாளர்கள் அதிகாரசபை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பாவனையாளர்களை வலுப்படுத்தலும் சந்தையை ஒழுங்குபடுத்தலும் வியாபார போட்டியை ஊக்குவிப்பதன் மூலம் பாவனையாளருக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொடுப்பதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதும், பாவனைக்கு பொருந்தாத பொருட்களை தடைசெய்வதும், கட்டுப்பாட்டு விலையினை மீறி கூடிய விலையில் விற்கின்ற வர்த்தர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பாவனையாளர்களை சுரண்டலில் இருந்து பாதுகாத்து கொள்ளும் நோக்கமாகவே இவ்விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாவனையாளர்கள் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் தரமானவையாகவும், விலை கட்டுப்பாட்டுக்கு உள்ளடங்கியவையாகவும் அமையாதவிடத்து அப்பொருட்களை வர்த்தகரிடம் திரும்பவும் கையளித்து தாம் செலுத்திய பணத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் இச்சட்டத்தின் மூலமாக ஏற்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

வெல்லாவெளி தினகரன், மட்டக்களப்பு குறூப் நிருபர்-கள்

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை