கிழக்கு மாகாண கால்நடை சுகாதார பணிப்பாளர் காரியாலயம் திறந்துவைப்பு

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் காரியாலயம் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டொக்டர் எம்.ஏ.எம். பாசில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

மத்திய அரசின் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதியுதவியுடன் 26 மில்லியன் ரூபா செலவில் இந்த இரண்டு மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதாக மாகாண பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது திருகோணமலை மாவட்டத்தில் வாழ்வாதாரம், பண்ணை அபிவிருத்தி போன்ற திட்டங்களை மேலும் வலுவூட்டும் நோக்கில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், சிறந்த சேவையை வழங்கும் நோக்கிலேயே இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மேலதிக மாகாண பணிப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை