தஜிகிஸ்தானில் ஐ.எஸ் தாக்குதல்: 17 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவிய இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் தஜிகிஸ்தான் நாட்டு எல்லை காவல் நிலை ஒன்றின் மீது நேற்று நடத்திய தாக்குதலின்போது பதினேழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உஸ்பகிஸ்தானுடனான எல்லை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் முகமூடி அணிந்த அந்த தாக்குதல்தாரிகள் 15 பேரை தஜிக் பாதுகாப்பு படையினர் கொன்றுள்ளனர்.

இதில் படை வீரர் ஒருவர் மற்றும் பொலிஸ் ஒருவரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐ.எஸ் உறுப்பினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானில் இருந்து எல்லையைக் கடந்து வந்திருப்பதாக தஜிக் எல்லைக் காவல் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மோதல் இடம்பெற்ற பகுதியில் எரிந்த வாகனம் ஒன்றுக்கு அருகில் கறுப்பு உடை அணிந்த பல சடலங்கை வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் சீன நாட்டு எல்லையைக் கொண்ட ஏழ்மையான நாடான தஜிகிஸ்தான் அண்மைய ஆண்டுகளில் ஜிஹாத் குழுக்களினால் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அண்மைய ஆண்டுகளில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் குழுவுடன் 1000க்கும் அதிகமான தஜிகிஸ்தான் நாட்டவர்கள் இணைந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை