லைபீரிய வங்கிகளில் பணத்திற்கு தட்டுப்பாடு

லைபீரியாவில் பணத்தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் வங்கிப் பண இயந்திரங்கள் முன் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து பணத்தைப் பெற முயன்றுவரும் நிலையில் லைபீரிய டொலர்களை தம்மால் பெற முடியாதிருப்பதாக வங்கிகளும் குறிப்பிட்டுள்ளன.

வங்கிகள் மீது போதிய நம்பிக்கையில்லாத மக்கள் வீடுகளில் பணத்தை வைத்திருப்பதால் வர்த்தக வங்கிகள் போதுமான பணம் இன்றி உள்ளது என்று நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

லைபீரியா பணத்தாள்கள் தொடர்பில் அண்மைய ஆண்டுகளில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

2018 ஆம் ஆண்டு மில்லியன் டொலர்களுக்கு புதிய பணத்தாள்களை அச்சடித்த நிலையில் அதன் ஒரு பகுதி காணாமல்போயிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பிலான விசாரணையில் முறையான அங்கீகாரம் இன்றி 10 பில்லியன் லைபீரிய பணம் அச்சிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் லைபீரியாவில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான லைபீரிய டொலரின் பெறுமது பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரித்த நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை