தனிநபர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுக்காமை குறித்து எம்பிக்கள் அதிருப்தி

இரண்டரை வருடங்களுக்கு ​மேலாகத் தனிநபர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுக்கப்படாமலிருப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பிரதமருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார். பாராளுமன்றத் தினப்பணிகளைத் தொடர்ந்து தினேஷ் குணவர்தன எம்.பி எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினையையடுத்து இது தொடர்பில் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

தினேஷ் குணவர்தன கூறுகையில்,2017 இல் நான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை இது வரை விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை. இது நிலையியற் கட்டளையை மீறும் செயலாகும். நிலையியற் கட்டளைக்கமைய செயற்பட இடமளிக்க வேண்டும். பலர் சமர்ப்பித்த பிரேரணைகள் இரண்டரை வருடங்களுக்கும் அதிக காலமாகியும் விவாதிக்கப் படாதுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிரதமரை அறிவூட்டியுள்ளதாகவும் சபாநாயகர் கூறினார். சுமேதா ஜெயசேன எம்.பி கூறுகையில் 2015 இல், நான் சமர்ப்பித்த மகளிர் மகா சபை தொடர்பான பிரேரணை இன்று வரை விவாதிக்கப்படவில்லை என்றார்.

தனது பிரேரணையும் இன்னும் விவாதிக்கப்படவில்லை எனவும் சபாநாயகர் கூறினார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை