நில அளவை திணைக்களத்திற்கு எதிராக தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு

தேர்தல் காலத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த நில அளவை திணைக்களத்தினர் பொது மக்களின் காணிகளை அளவீடு செய்து இராணுவத்தினருக்காக சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக தெரிவித்து வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள தேர்தல் திணைக்களத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் நேற்று (30) காலை முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

முறைப்பாட்டினை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்,

மிகவும் துரிதமாக நில அளவை திணைக்களத்தினர் பொதுமக்களின் காணியினை அளவீடு செய்து சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். தேர்தலை சாட்டாக வைத்து மக்களை திரட்ட முடியாது , தேர்தல் சட்டத்தின் பிரகாரம் மக்களின் எதிர்ப்புக்கள் வராது என்பதை நோக்கில் கொண்டு அதனை சுவீகரிக்கும் நடவடிக்கையில் மேற்கொண்டுள்ளனர்.

எனவே இதனை கருத்தின் கொண்டு நான் வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளருக்கும் நேரடியாக இந்த முறைப்பாட்டினை நேற்று மேற்கொண்டேன் . உடனடியாக அவர்கள் இதனை நிறுத்த வேண்டும். தேர்தல் சட்டத்தின் கீழ் ஒரு பகுதியினை வளர்த்து விடுவதற்கான நடவடிக்கையில் தேர்தல் திணைக்களம் இறங்கியிருப்பதாகதான் நான் குற்றம் சாட்டியுள்ளேன் . எனவே இவ் நடவடிக்கையினை நில அளவை திணைக்களத்தினர் இடைநிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 

கோவில்குளம் தினகரன், வவுனியா விசேட நிருபர்கள்

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை