ஆட்சிக் கவிழ்ப்பின் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவு

பாரிய பொருளாதார திருட்டுகள் பற்றி இன்று கூறிவருபவர்கள் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அரசாங்கத்தை திருடிக்கொண்டமையால்தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்ததுடன், இன்று இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான கணக்கு வாக்கெடுப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஆண்டு வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த காலப் பகுதியில் இந்நாட்டில் பாரிய பொருளாதார திருட்டுப் பற்றி பேசுபவர்கள் ஒக்டோபர் 26ஆம் திகதி அரசாங்கத்தையே திருடிக்கொண்டனர். அவர்களுக்கு எவ்விதமான உரிமையும், அருகதையும் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி பேசுவதற்கு இல்லை.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு முதல் வருடம் நாட்டின் பொருளாதாரத்தை

 

திட்டமிட்டு சீர்குலைக்க வேண்டுமென்பதற்காகவே அரசாங்கத்தை திருடிக்கொண்டனர். இடைக்கால கணக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்துதான் இப் பொருளாதார வளர்ச்சியை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

இலங்கையின் பொருளாதார முதுகெலும்பு எனக் கூறப்பட்ட பெருந்தோட்டத்துறைக்கு இன்று என்ன நடந்துள்ளது? வெளிநாட்டுக்குச் சென்று அவர்கள் அனுப்பிவைக்கும் பணத்தில்தான் அந்நிய செலாவணி வருமானத்தை பெற்றுக்கொள்கின்றோம். மலையக மக்கள் அபிவிருத்தியில் பேதப்படுத்தப்பட்டுள்ளனர்.

வரவு – செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதில்லை. 1000 ரூபா, 1500 ரூபா என சம்பளத் தொகைகளை இந்த மக்களை வைக்காது எவ்வாறு தென்பகுதி சிங்களவர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றப்பட்டார்களோ அதேபோன்று அத்தனை தமிழ் தோட்டத் தொழிலாளர்களும் சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றப்பட வேண்டும் என்றார்.

ஹம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை