கனிஷ்ட உலகக் கிண்ண கபடிப் போட்டி: நிந்தவூரிலிருந்து இருவர் தெரிவு

எதிர்வரும் நவம்பர் மாதம் ஈரான் நாட்டில் நடைபெறவுள்ள கனிஷ்ட உலகக் கிண்ண கபடிப் போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை தேசிய அணிக்கு நிந்தவூரைச்சேர்ந்த இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ம் திகதி டொரிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற இக்கபடிப் போட்டிக்கான இறுதி ஆண்கள் தெரிவின் போதே நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழத்தின் வீரர்களான எஸ்.எம்.சபிகான் மற்றும் ஏ.எம்.ஹாலிஸ் ஆகியோர் கபடி தெரிவுக்குழுவினால் Best Raiders ஆக தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இரண்டாவது முறையாக இலங்கை கபடி தேசிய அணியில் இடம்பிடிக்கும் நிந்தவூர் வீரர்களாக இவர்கள் சாதனையைப் பதிவு செய்துள்ளனர். இதற்கு முதல் இதே கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட வீரர் எம்.ரி.அஸ்லம் சஜா இதற்கு முன்பு தேசிய கபடி அணிக்கும் கனிஷ்ட கபடி அணிக்கும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது. இது கிழக்கு மாகாணத்தின் உயர்தகு சாதனை என்பதுடன், தங்களின் சொந்த ஊரான நிந்தவூரிற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை இவ்விரு வீரர்களின் திறமைகளில் தொடர் பயிற்சிகளை வழங்கிய மதீனா கழகத்தின் செயலாளரும், ஆசிரியருமான எஸ்.எம்.இஸ்மத், அவரோடு இணைந்து பயிற்சியை வழங்கிய எம்.ரி.அஸ்லம் சஜா மற்றும் மேலதிக ஆலோசனைகளை வழங்கிய அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.அனஸ் அஹமட் மற்றும் மதீனா விளையாட்டுக்கு கழகத்தின் தலைவரும், ஆசிரியருமான ஏ.எம். அன்சார் உள்ளிட்டோர்களுக்கு விளையாட்டுத்துறை சமூகம் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

(நிந்தவூர் குறூப் நிருபர்)

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை