ஹட்ச் வலுவூட்டலுடன் காவல்ரி சுப்பர்குரோஸ் - 2019

இலங்கை இராணுவத்தின் கவச வாகனப் படைப்பிரிவால் ஏற்பாட்டில் 9 ஆவது தடவையாக இடம்பெற்ற காவல்ரி சுப்பர்குரோஸ் மோட்டார் பந்தய நிகழ்வானது இலங்கை மோட்டார் பந்தய ஓட்டுனர்கள் மற்றும் ஓட்டிகள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெற்று வருகின்ற ஹட்ச் சுப்பர் Series பந்தயத் தொடரின் ஒரு அங்கமாகும். இப்பந்தயத்திற்கு தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் பிரதான அனுசரணையை ஹட்ச் வழங்கியுள்ளதுடன், யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் நலன் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நிதிதிரட்டுவதற்காக இலங்கை இராணுவத்தின் ஆதரவுடன் இது ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

குருணாகல் பங்கொல்லவில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், சர்வதேச தராதரங்களுக்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு பந்தய நிகழ்வுகளின் மூலமாக மோட்டார்ப் பந்தய வீரர்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஹட்ச் வர்த்தகநாமத் தூதுவரான குஷான் பீரிஸ் அவர்கள் தனது கடந்தகாலத் திறமைகளை மீண்டும் ஒரு முறை சிறப்பாக வெளிப்படுத்தி, 3500 சிசி வரையான பிரிவின் கீழ் Cavalry Super Series 2019 SL-GT Cars பந்தயத்தில் இரண்டாவது இடத்தைத் தனதாக்கியுள்ளது.

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை