ஆர்ப்பாட்டங்களை அடுத்து சிலி அமைச்சரவை கலைப்பு

சிலியில் சமூக சீர்திருத்தங்களை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஒட்டுமொத்த அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்து புதிய அரசொன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

“புதிய கோரிக்கைகளுக்கு முகம்கொடுப்பதற்காக எனது அமைச்சரவை மீளமைப்பதற்கு உத்தரிட்டேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக நீதியை கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் தலைநகர் சன்டியாகோவில் ஒன்றுதிரண்டு அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு வாரத்திற்கு முன் சிலி நகரங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை ஜனாதிபதி நீக்கியுள்ளார்.

தற்போதுள்ள அவசர நிலையையும் முடிவுக்குக் கொண்டுவரும்படி எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன் ஆரம்பமான ஏற்றத்தாழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்தே இந்தப் போராட்டம் ஆரம்பமானது. பின்னர் அந்த கட்டண உயர்வு கைவிடப்பட்டது. ஆனாலும், வாழ்க்கை செலவுகள் உயர்வது, பாகுபாடுகள் ஆகியவற்றை மையமாக வைத்து போராட்டம் தொடர்கிறது.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை