இராட்சத விமானநிலையத்தின் சர்வதேச சேவைகள் ஆரம்பம்

பெய்ஜிங்கில் 63 பில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட டக்சிங் விமான நிலையம் அதன் முதல் சர்வதேச விமானச் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

ஈராக்கிய கட்டடக்கலை நிபுணர் ஸாஹா ஹதீத்தின் கைவண்ணத்தில் அந்த பிரம்மாண்ட விமான நிலையம் வடிவமைக்கப்பட்டது. சீனாவின் 70 ஆண்டுகால நிறைவுவிழாவைக் கொண்டாட கடந்த மாத இறுதியில் புதிய விமான நிலையம் அதிகாரபூர்வமாகச் செயல்பட ஆரம்பித்தது.

புதிய விமான நிலையத்தின் அளவு சுமார் 100 கால்பந்துத் மைதானங்களுக்கு சமமாகும்.

நான்கு ஓடுபாதைகள் கொண்டு விமானநிலையம், ஆண்டுக்கு 72 மில்லியன் பயணிகள் வரை கையாளக்கூடும். 2025ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை 100 மில்லியனை எட்டக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தாய்லந்தின் பங்கொக்கிற்கு ஏர் சீனா நிறுவனத்தின் விமானம் முதலில் நேற்று புறப்பட்டுச் சென்றது.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை