அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஈராக்கில் 67 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் ஏற்பட்டிருக்கும் புதிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இரண்டாது நாளாகவே நீடித்ததோடு இதன்போது பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதல்களில் இதுவரை 67 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் பக்தாதில் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது பலரும் கொல்லப்பட்டனர். நசரியா நகரிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை நாடுதழுவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல டஜன் பேர் கொல்லப்பட்ட நிலையிலேயே அதற்கு அடுத்த நாள் இந்த மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

ஊழலை ஒழிக்கவும் சிறந்த போதுச் சேவைகளையும் தொழில்வாய்ப்புகளையும் கோரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் பாதுகாப்பு படையினரால் கடும் பலப்பிரயோகத்தை பயன்படுத்தி ஒடுக்கப்பட்டது. அந்த சம்பவங்களில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தலைநகர் பக்தாத் மற்றும் தென் மாகாணங்களில் மீண்டும் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை