சிரியா விவகாரம்: துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

சிரிய விவகாரத்தில் துருக்கி எல்லை மீறி செயற்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், துருக்கியின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் நிலைகொண்டுள்ள சுமார் ஆயிரம் அமெரிக்கப் படையினர்களில் சிலர் எல்லைப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிரியாவின் கிழக்குப் பகுதியில் தாக்குதலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட குர்திஷ் படையினர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்துவதற்கு துருக்கி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே படையினரை வெளியேற்றும் தனது தீர்மானத்தை துருக்கி தமக்கு சாதகமாக்குவதற்கு முயற்சிக்கக் கூடாது என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறான அத்துமீறல்கள் இடம்பெறும் பட்சத்தில் தான் துருக்கி மீது ஏற்கனவே முன்னெடுத்ததை போன்று கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை