ஹொங்கொங் பூரண கட்டுப்பாட்டில்; பிரதம நிர்வாகி லாம்

ஹொங்கொங்கில் மீண்டும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களால் வன்முறைகள் வெடித்ததையடுத்து தற்போது நிலைமைகள் கட்டுக்குள் இருப்பதாக ஹொங்கொங்கின் பிரதம நிர்வாகி லாம் நம்பிக்கை தெரிவத்துள்ளார். ஆனாலும் கட்டுப்பாட்டையும் மீறி வன்முறைகள் மோசமானால், சீனாவின் தலையீடு தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் அவர் கூறினார்.

ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஆர்பாட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, அவை 'ஜனநாயத்துக்கான அமைதியான போராட்டங்களல்ல' வென்பதைக் காண்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும் நிலைமைகளை சமாதானமாகத் தீர்த்துக் கொள்வற்கான சந்தப்பம் இன்னமும் இருப்பதாகவே தான் கருதுவதாகவும் அவர் சொன்னார்.

முகமூடிகள் அணிவதற்கு விதிக்கப்பட்ட புதிய தடையை எதிர்த்து போராட்டங்கள் ஹொங்கொங்கில் இடம்பெற்றன. அவை வன்முறையாகவும் மாறின. பொது இடங்களில் இடம்பெறும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது முகமூடி அணிய புதிய தடை அண்மையில் விதிக்கப்பட்டிருந்தது.

2012ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தது முதல் சீன ஜனாதிபதி ஜின்பின் தற்போதுதான் பாரியளவிலான எதிர்ப்பார்ப்பாட்டங்களைச் சந்தித்து வருகின்றார்.

ஹொங்கொங்கின் மெட்ரோ ரயில் சேவையானது தினமும் ஐந்து மில்லியன் பேரைச் சுமந்து செல்கின்றது. புதிய ஆர்ப்பாட்ட அலை ஆரம்பித்தது முதல் ஏற்பட்ட வன்முறைகளால் பல ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

முகமூடிகள் அணிந்த ஆர்ப்பாட்டக் காரர்களே வன்முறைகளில் ஈடுபடுவதாக ஹொங்கொங் பொலிஸ் கூறுகின்றது.

ஹொங்கொங்கின் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆரம்பத்தில் போராட்டம் ஆரம்பமாகியது.

1997ஆம் ஆண்டில் ஹொங்கொங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து அது சீனாவின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை