வேலியை தாண்டி சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் மீது புகார்

அமெரிக்காவிலுள்ள புரொங்ஸ் மிருகக்காட்சி சாலையில் பாதுகாப்பு வேலியைத் தாண்டி சிங்கத்தின் முன் நடனம் ஆடிய பெண் விபரீதமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக மிருகக்காட்சி சாலை கூறியுள்ளது.

ஆபிரிக்கச் சிங்கம் நிற்க, பெண் அதன் முன் நடனம் ஆடும் வீடியோவை சுற்றி நின்ற பொதுமக்களில் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவுசெய்தார். அந்த சிங்கம் ஓரிரு அடிகள் முன்னால் வந்தபோதும் எந்தப் பயமும் இன்றி அந்தப் பெண் சிங்கத்திற்கு கையசைத்து நடனமாடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. எனினும், அப்பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்த சிங்கம் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்துள்ளது, பின்னர், அப்பெண் பத்திரமாக திரும்பியுள்ளார்.

இந்த காட்சியை கண்ட அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். குறித்த பெண் யார் என தற்போது வரை அடையாளம் காணப்படவில்லை.

இச்சம்பவத்தை உறுதி செய்த மிருகக்காட்சி சாலை நிர்வாகம், இந்த நடவடிக்கை கடுமையான மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல், இது கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியது. ஆனால் சம்பவம் நடந்த அன்று யாரும் பாதுகாப்பு பிரிவினரை தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் பெண்ணுக்கு எதிராக மிருகக்காட்சி சாலை புகார் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் சிங்கத்திற்கோ அல்லது அந்தப் பெண்ணுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பெண் எப்படிப் பாதுகாப்புத் தடுப்புகளை மீறிச்சென்றார் என்பது தெரியவில்லை.

Thu, 10/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை